மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு
X
- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின் படி,

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும். அனைத்து மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைக்கப்படுவது அவசியமானது.

தேவைக்கேற்ப மாற்றுத் திறனாளிகள் நலத் துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture