தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் சூரிய மின் உற்பத்தி பூங்கா:அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் சூரிய மின் உற்பத்தி பூங்கா:அமைச்சர் அறிவிப்பு
X

அமைச்சர் செந்தில்பாலாஜி(பைல்படம்)

தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்து கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக சேதமடைந்த காரணத்தால் இந்த குடியிருப்புகளில் வசித்த 112 வீடுகளில் 33 வீடுகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இங்கு வசித்த 33 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பாக அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளரிடம் மேலும் கூறியதாவது: பாதிக்கப்பட்ட இந்த 112 குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ் நாட்டுக்கு தேவையான மொத்த மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில் 22 சதவீதம் மட்டுமே தமிழக அரசு சொந்தமாக உற்பத்தி செய்கிறது. மீதி மத்திய அரசு இடமிருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து 56 சதவீதம் அளவிற்கு மின் கொள்முதல் செய்யப்படுகிறது. அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் 204 மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல 12 துணை மின்நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட அதிக திட்டப்பணி இதுவாகவே இருக்கும். இது போன்று கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய உற்பத்தி என்பது கடந்த 2006 - 11ல் 85 சதவீதமாக இருந்து.

தமிழக அனல் மின் நிலையத்திற்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து நிலக்கரி வாங்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒடிசாவில் இருந்து வாங்கி உற்பத்தி செய்வதை மாற்றி அவர்களிடமே நிலக்கரி கொடுத்து உற்பத்தி செய்து தமிழகத்திற்கு மின் உற்பத்தி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மிச்சம் ஆகியது. சூரிய மின் உற்பத்தி பொருத்தவரை, அந்தந்த மாவட்ட மக்களின் தேவைக்கு ஏற்ப சூரிய மின் உற்பத்தி செய்துகொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும் சூரியனின் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 4000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!