ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை
X

பைல் படம்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஒரே நேரத்தில் அரபிக்கடலிலும் புதிய 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், அரபிக்கடலிலும் புதிய 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒரே நேரத்தில் உருவாகி உள்ளதால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ,சேலம், ஈரோடு ,திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Tags

Next Story
importance of ai in healthcare