ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் 'சைலன்ட் கேன்வாசிங்' மும்முரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளைக்காலை தொடங்குகிறது. இதற்காக நேற்று மாலையே பிரச்சாரம் நிறைவடைந்தது. நேற்று மதியம் முதல் இரவு வரை விட்டமின் ப சென்ற நிலையில்,. இன்று காலை முதல் 'சைலண்ட் கேன்வாசிங்' தொடங்கி உள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும், தங்கள் பகுதியில் ஜாதி தலைவர்கள், ஜாதி பிரமுகர்கள், சங்க தலைவர்கள், சங்க பிரமுகர்கள், முக்கிய வி.ஐ.பி.,க்கள், தொழில் அதிபர்கள், பெரும் வணிகர்கள் என அத்தனை பேரையும் சந்தித்து பேசி, ஓட்டுகளை சேகரிக்க தங்களுக்கு வேண்டிய நபர்களை நியமித்துள்ளனர்.
பிரச்சாரத்திற்கு தடை உள்ளதால் 'சைலண்ட் கேன்வாசிங்' செல்பவர்கள், வாக்காளர் பட்டியல், வேட்பாளரின் விவரம், பணம் உட்பட எதுவுமே கொண்டு செல்ல முடியாது. கூட்டமாகவும் செல்ல முடியாது. எனவே தனி நபர்களாக கேன்வாசிங் செய்ய, பலரை நியமித்து அனுப்பி வி்ட்டனர். மாநிலம் முழுவதுமே சைலண்ட் கேன்வாசிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சைலன்ட் கேன்வாசிங், மொபைல் கேன்வாசிங்கில் ஈடுபடுபவர்களில் பலர் நிழல் உலக அரசியல் பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். என்ன தான் பணம் கொடுத்திருந்தாலும், ஒவ்வொரு ஓட்டுக்கும் எத்தனை ஆயிரம் பணம் கொடுத்திருந்தாலும், இந்த சைலன்ட் கேன்வாசிங்கில் மனமாற்றம் அடையும் ஓட்டுகளின் எண்ணிக்கை தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu