தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் சக்தியாக சீமான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் சக்தியாக சீமான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
X

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் அழிவு சக்தியாக சீமான் உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேச்சு.

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் அழிவு சக்தியாக சீமான் உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேச்சு.

தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் அழிவு சக்தியாக சீமான் உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேச்சு.

தமிழக காங்கிரஸின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

செல்வபெருந்தகை பேட்டி:

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை திட்டி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மத்திய இணை அமைச்சரின் மகன் விவசாயிகளை காரை ஏற்றி கொன்றுள்ளார்கள். அவர்களை சீமான் கேட்கவில்லை விவசாயிகளுக்காக பரிந்து பேசவில்லை. ஆனால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிக் கொண்டிருக்கும் காங்கிரசை சீமான் திட்டிக் கொண்டிருக்கிறார். சீமான் பச்சைத் துரோகி அவர் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறார் அனைவரையும் கடித்து குதறுகிறார். டைரக்டர் ரஞ்சித் படமெடுத்தால் அவரையும் குதறுகிறார். விளிம்பு நிலையில் இருந்து வந்தவரையும் எதிர்க்கிறார். காங்கிரஸ் பேரியக்கத்தையும் இந்திரா காந்தியின் குடும்பத்தையும் தவறாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் அம்பேத்கருக்கு பிறகு ஏற்றுக் கொண்ட தலைவர் இந்திரா காந்தி அவர்களின் குடும்பத்தை நக்கல் அடித்தால் உங்கள் வீட்டிற்கு காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வருவோம் என இறுதி எச்சரிக்கை செய்வதாக கூறினார்.

காங்கிரஸ் கட்சியானது ஆர்.எஸ்.எஸ் ஐ கொள்கை ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கிறது. ஆனால் கொச்சைப்படுத்திப் பேச மாட்டோம் பிஜேபியை நாட்டில் அனுமதிக்க கூடாது என்கிறோம். நாகரீகமாக சொல்கிறோம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக சொல்கிறோம். ஆனால் சீமான் மிகவும் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டு வருகிறார். அண்ணாவையும் பெரியாரையும் கடைப்பிடிப்பதாக சீமான் கூறுகிறார். கடல் கடந்து வந்த தீவிரவாதிகளை அண்ணாவும் பெரியாரும் ஆதரிக்க சொல்லவில்லை. எல்லோரையும் நக்கல் அடிப்பதும் கிண்டல் செய்வதும் அநாகரிகமாக பேசுவதும் சீமானின் வேலையாக உள்ளது. நக்கலடித்து காமெடி செய்வதில் வடிவேலுவை மிஞ்சி விடுவார் சீமான்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி:

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழகத்தில் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் வளர்த்து வருகிறார். தமிழக இளைஞர்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி தயார் என துரைமுருகன் பேச்சு சீமான் ஒப்புதலோடும் தூண்டுதலோடும் நடைபெற்றது. எனவே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம். இளைஞர்கள் என்றாலே எழுச்சியுடன் தான் இருப்பார்கள் அவர்களது எழுச்சியை பயங்கரவாத சக்தியாக பயன்படுத்த நினைக்கிறார் சீமான். தமிழக இளைஞர்களின் வாழ்வை அளிக்கும் ஆபத்தாக சீமான் உள்ளார். தமிழக பெற்றோர்கள் கஷ்டப்பட்டு தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அவ்வாறு படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை சீமான் கேள்விக்குறியாக்கி வருகிறார். சீமான் தமிழகத்தின் அழிவு சக்தியாகவும் பயங்கரவாத சக்தியாகவும் இருக்கிறார் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜோதிமணி கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!