பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு
பைல் படம்.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களில் படிக்கும் மாணவர்கள் நாளை மறுதினம் முதல் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லுாரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு அறிவித்த தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் அரசு கல்லுாரிகள் நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது.
நடப்பு கல்வியாண்டில், மாணவ–மாணவியர்களுக்கான இலவச பஸ் பாஸ் அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பஸ்களில் பள்ளி மாணவ– மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துனர்களிடம் காண்பித்து தங்கள் இருப்பிடத்திலிருந்து படிக்கும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்கலாம்.
இதைப்போல் அரசு கல்லுாரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ – மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துனர்களிடம் காண்பித்த இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu