சத்தியமூர்த்தி பவனில் 2 தலைவர்கள் பிறந்த நாளில் ஓரு தலைவரின் நினைவு நாள் கருத்தரங்கம்
தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காலம் காட்டிய கருணை என்ற தலைப்பில் வழக்கறிஞர் இலக்கியச் சுடர் ராமலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இளங்கோவன் விஷ்ணுபிரசாத் எம்பி விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்
அப்போது பேசிய கே எஸ் அழகிரி:
தமிழ் மொழியின் அவசியத்தைப் பற்றி தமிழ் மொழியின் இன்றியமையாமை பற்றி தமிழ் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்பதை பற்றிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தங்களை நாம் பார்த்துள்ளோம். தமிழுக்காக நாம் அதிக அளவு தொண்டாற்றி இருப்பினும் நம் தவறவிட்ட இடம் எது என்று பார்த்தால் அனைவரையும் கவரும் வகையான பரப்புரையை ஆற்றுவது கிடையாது அதே போல மக்கள் சொக்கி கீழே விழும் அளவிற்கான பரப்புரையை செய்வதும் கிடையாது அந்த இடத்தில் மட்டுமே நாம் ஆட்சியை தவிர விட்டிருக்கிறோம்
காமராஜரை தூக்கிப் பிடித்தவர் பெரியார் ஆனால் நம் சிறந்த முறையில் பரப்புரை ஆற்றுவதும் இல்லை வலியும் இல்லை ஒற்றுமையும் இல்லை குறைகளை சரி செய்யும் மனப் பக்குவமும் இல்லை அப்படி இருந்தால் எப்படி நம்ம ஆட்சியை அடைய முடியும் இது பற்றி நம் தோழர்கள் சிந்தித்து சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்றார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu