சசிகலாவின் ரூ.100 கோடி சொத்து முடக்கம்: அதிரடிக்கு காரணம் இதுதான்
X
By - C.Pandi, Reporter |8 Sept 2021 4:44 PM IST
சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை, வருமானத்துறையினர் திடீரென முடக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களாவை, வருமானத்துறை அதிகாரிகள் முடக்கி இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது இது குறித்த வழக்கின் தீர்ப்பின்படி, சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். இந்நிலையில் சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சொகுசு பங்களா ஒன்றை, வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது, இந்த சொகுசு பங்களாவில் மதிப்பு 100 கோடி என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்ததாகவும், இந்த சோதனையின் அடிப்படையில் பினாமி சொத்து சட்டத்தின் கீழ், சசிகலாவின் சொகுசு பங்களா முடக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu