சசிகலாவுக்கு ஆஸ்கர் அவார்டு வேண்டுமானால் கிடைக்கலாம், அதிமுகவில் இடம் இல்லை

சசிகலாவுக்கு ஆஸ்கர் அவார்டு வேண்டுமானால் கிடைக்கலாம், அதிமுகவில் இடம் இல்லை
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சசிகலாவுக்கு ஆஸ்கார் அவார்டு வேண்டுமானல் கிடைக்கலாம், ஆனால் அதிமுகவில் இடம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களி டம் கூறியதாவது:

ஜெயலலிதா நினைவிடத்துக்க தினசரி லட்சக்கணக்கான பேர் போவார்கள். அதேமாதிரி லட்சத்தில் ஒருவராக சசிக லாவையும் சேர்த்துக் கொள்ளலாம். அவர், ஜெயலலிதா சமாதிக்கு போனது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவது இல்லை.

அதிமுக மிகப்பெரிய யானை. பெரிய பலம் பெற்றது. ஏதோ கொசு, யானை மீது உட்கார்ந்து, நான்தான் யானையை தாங்கிக் கொள்கிறேன் என்றால், மக்கள் இதை எள்ளி நகையாடும் விஷய மாகதான் இருக்கும். ஜெயலலிதா சமாதிக்கு எல்லோரும் போறாங்க, சசிகலாவும் நேற்று போயுள்ளார். 17ம் தேதி (இன்று) தான் அதிமுக பொன்விழா நிகழ்ச்சி கொண்டா டப்படுகிறது. 16ம் தேதி (நேற்று) எப்படி பொன் விழா ஆண்டு ஆகும். அதுகூட சசிகலாவுக்கு தெரியவில்லை .

அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு தார்மீக உரிமை கிடையாது. சட்டப்படி யான விதிமீறல். அவர், வேண்டும் என்றே அதிமுக கொடியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா நினைக்கிறார். நாங்கள் நினைத்தால் தடுக்கலாம்.

ஆனால், நாங்கள் சட்டத்தை கையில் எடுக்க விரும்பவில்லை அரசியலில் தனக்கு ஒரு நிரந்தர இடம் வேண்டும் என்றால் சசிகலாவுக்கு டி.டி.வி.தினகரன் அமமுகவில் ஒரு நல்ல இடம் கொடுக்கலாம். அதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை . அதிமுக கூடிய விரைவில் எனது கட்டுப்பாட்டில் வரும் என்று சசிகலா சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

அது நடக்காது. சசிகலா என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டே போகலாம். நாங்கள் எந்த தடையும் இல்லாமல் அதிமுகவை வழி நடத்த வருகிறோம். சசிகலாவுக்கு அதிமுகவில் எந்த இடமும் கிடை யாது.

தேவைப்பட்டாள் அமமுகவில் அவருக்கு பதவி கொடுக்கலாம். அறிக்கையில் எழுதி கொடுப்பதை கூறி என்ன வேண்டுமானாலும் பேசலாம். மக்களின் உண்மையான தலைவராக ஜெயலலிதாதான் உள்ளார்.

இவரை தொண்டர்கள் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவினரால் நிராகரிக்கப்பட்டவர்தான் சசிகலா சமாதிக்கு போகட்டும், கண் கலர் கட்டும். இந்த நடிப்புக்கு ஆஸ்கர் அவார்டு வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால், அதிமுக கட்சிக்காரர்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதிமுக கட்சியிலும் அவருக்கு எப்போதும் இடம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!