சசிகலாவால் அதிமுகவில் பிளவை ஏற்படுத்த முடியாது: முன்னாள் அமைச்சர் விமர்சனம்

சசிகலாவால் அதிமுகவில் பிளவை ஏற்படுத்த முடியாது: முன்னாள் அமைச்சர் விமர்சனம்
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சசிகலாவால் அதிமுகவில் எந்த பிளவையும் ஏற்படுத்த முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி. அவரால் அதிமுகவில் எந்த பிளவையும் ஏற்படுத்த முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. தேர்தல் நேர்மையாக ஜனநாயக முறையில் நடைபெற்று இருந்தால் வெற்றி, தோல்வி சமமாக இருந்திருக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தான் அம்மா என்று மக்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். நானும் அம்மா தான் என்று சொல்லிக்கிட்டு வந்தால், அதை மற்றவர்கள் பார்த்து கேலியாக சிரிக்கின்ற நிலைமை தான் ஏற்படும். எனவே அம்மா அம்மா தான் மத்ததெல்லாம் சும்மா என்று சசிகலாவை சுட்டிக்காட்டி விமர்சித்தார். தமிழ்நாட்டில் இரண்டு தீய சக்திகள் உள்ளது. அதில் ஒன்று திமுக, மற்றொன்று சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!