2 நாள் டைம் : 'ஹேர் கட்' பண்றவங்க பண்ணிக்கங்க

2 நாள் டைம் : ஹேர் கட்  பண்றவங்க  பண்ணிக்கங்க
X
சலூன் கடைகள் இன்றும் நாளையும் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகத்தை கட்டுப்படுத்த வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பொதுமக்களும் நிறுவனங்களும் தமக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கின் போது, சலூன் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் சலூன் கடைகள் இயங்குமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், சலூன் கடைகள் இன்றும் நாளையும் இயங்கலாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!