சேலம் எட்டுவழிச்சாலை நிலைப்பாடு குறித்து, சட்டமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்படும் : அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தமிழக முழுவதும் உள்ள பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசின் சார்பாக கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகதான் கட்டப்படுகிறது.
கட்டடங்கள் கட்டுவதற்கு ஏற்படும் காலதாமதம் குறித்த ஆய்வு மேற்கொண்டதில் ஒப்பந்ததாரர்களுக்கு சில குறைகள் உள்ளது என்றும் அவர்களின் குறைகளை கேட்க கலந்துறையாடல் கூட்டம் நடத்தினோம் என கூறினார்.
ஒப்பந்ததாரர்கள் கலந்துறையாடல் கூட்டத்தில் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். தற்போதைய ஒப்பந்த முறையில் மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் Package system கூடாது என்று ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுக்கு 4,5 முறை கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் ஒப்பந்தப்பணி முடியும் போது நஷ்டம் ஏற்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்ததாரர்கள் கருத்துகளை குறிப்பெடுத்துள்ளோம் சட்டசபை கூடவுள்ளது ஒப்பந்ததாரர்கள் நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சென்று நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என அமைச்சர் கூறினார்.
மேலும், அரசாங்கம் வெளிப்படைத்தன்மையாக செயல்படும் என்றும் சேலம் எட்டுவழிச்சாலை குறித்த நிலைப்பாடு சட்டமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu