டெல்லியில் நடந்தது என்ன? அமைச்சர் மா.சுப்ரமணியன் பரபரப்பு பேட்டி

டெல்லியில் நடந்தது என்ன? அமைச்சர் மா.சுப்ரமணியன் பரபரப்பு பேட்டி
X

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன், டெல்லியில் நடந்தது என்ன என்பது குறித்து பரபரப்பு பேட்டி அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி:

தமிழகத்தில் மருத்துவம் தேவைகளை குறித்த 15 கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட்டது. 11 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மருத்துவ கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

மத்திய அரசு ஆய்வு செய்து 850 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது. மீதமுள்ள 800 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதித்து இந்தாண்டே தொடங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான நல்ல தீர்வு விரைவில் வந்துவிடும். இந்தாண்டே மருத்துவ கல்லூரிகள் திறந்து மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்ப்பார்க்கிறோம்.

தமிழகத்தில் 13 லட்சம் கோவாக்சீன் தடுப்பூசி 2வது தவனை போடப்பட வேண்டி உள்ளது. 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. 10 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். 2வது தடுப்பூசி செலுத்த கோவாக்சீன் தருவதாக கூறி உள்ளனர். 7வது தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. 2வது தவனை தடுப்பூசி போட வேண்டி 60 ஆயிரம் பேர்களின் பட்டியல் தயாரித்து அவர்களை அழைத்து போட வைக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி கட்டாயப்படுத்தி போட வைக்க முடியாது. ஆனால் தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கி போட வைக்கப்படும். உலகத்தில் கொரோனா 3வது அலையின்தாக்கம் பெரிய அளவில் உள்ளது.

அமெரிக்காவில் 60 ஆயிரம், இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவில் 30 ஆயிரம், சீனாவில் மீண்டும் பொது முடக்கம் என உள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் நோய் மராட்டியத்தில் 1 சதவீதம் கர்நாடகாவில் 7 பேருக்கும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. தடுப்பூசி மட்டும் தான் கொரோனாவிற்கான தீர்வு என விழிப்புணர்வு செய்து தடுப்பூசி போட வைக்க வேண்டும்.

சென்னை விமான நிலையத்தில் 200 விமான சேவை இயக்கப்படுகிறது. பன்னாட்டு முனையத்தில் கொரோனா வழிகாட்டு முறையில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 70 சதவீத முதல் தவனை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. எந்த ஒரு நாடு 70 சதவீத தடுப்பூசி போட்டு கொள்கிறதோ அது பாதுகாப்பாக இருக்கும் என மருத்துவ வல்லுனர்கள் சொல்லி உள்ளனர். அந்த வகையில் 5 கோடியே 71 லட்சத்தை தாண்டி முதல் தவனை 70 சதவீதம் அடைந்து உள்ளது.

தமிழகத்தில் தான் ஆய்வகம் தனியாக வைத்து உள்ளோம். ஆய்வகம் பள்ளி மாண்வர்கள், வெளியூரில் இருந்து வருபவர்கள் உள்பட 7 தரப்பில் இருந்து எடுத்து சோதித்த போது டெல்டா வைரஸ் தான் இருந்தது. 13 பேருக்கு தான் டெல்டா பிளஸ் இருந்தது. இதுவரை எதுவும் இல்லை. வராது என்று எதிர்பார்க்கிறோம்.

விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது. கேரளாவில் பாதிப்பு இருப்பதால் 13 மாவட்ட எல்லைகளில் கண்காணிக்கப்படுகிறது. எல்லா மாவட்டங்களில் 2வது தவனை தடுப்பூசி போட முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!