தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமான மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம்
திமுக எம்பி தயாநிதிமாறன்
தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமே மஞ்சள் நிறம் தான். இந்த மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம் என்றார் திமுக எம்பி தயாநிதி மாறன்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் இன்று பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தாமஸ் சாலையில் இருக்கின்ற குடியிருப்பு வாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மக்கள் பணியே மகேசன் பணி என்று எங்கள் தலைவர் சொல்வதைப் போன்று எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.
பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக வே மஞ்சள்நிற பைகளை பயன்படுத்துகிறோம். உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு மஞ்சப்பையை பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதற்கு மாற்று வழியாக மஞ்சப்பை பயன்படுத்துகிறோம். மஞ்சள் கலர் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமே மஞ்சள் தான். எனவே மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம் என்றார் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu