அமைச்சர் செல்லும் வரை காத்திருந்து, தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை

அமைச்சர் செல்லும் வரை காத்திருந்து,  தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை
X

கொலை செய்யப்பட்ட மதன்.

சென்னையில் அமைச்சர் செல்லும் வரை காத்திருந்து, தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை பல்லவன் சாலை காந்தி நகரில் நேற்று இரவு சமீபத்தில் மறைந்த தி.மு.க. நிர்வாகியின் புகைப்படம் திறப்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.சிறிது நேரத்தில் அமைச்சர் சென்ற பின்னர் தி.மு.க. நிர்வாகி மதன் என்பவரை 4பேர் கொண்ட மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி கொன்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் , ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் மதனின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சமீபத்தில் தான் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் மதன் இணைந்துள்ளார். ஆகவே மாநகராட்சி தேர்தலில் அப்பகுதியில் திமுகவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து இருந்துள்ளார்.எனவே தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!