/* */

அமைச்சர் திடீர் விசிட் : வசமாக சிக்கிய ரிஜிஸ்ட்ரார். சைதாப்பேட்டையில் பரபரப்பு

சைதாப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை பார்வையிட வந்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் ரிஜிஸ்ட்ரார் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அமைச்சர் திடீர் விசிட் : வசமாக சிக்கிய ரிஜிஸ்ட்ரார். சைதாப்பேட்டையில் பரபரப்பு
X

சைதாப்பேட்டை பத்திர பதிவு அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சைதாப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது மக்களின் கூட்டம் அலை மோதியதைக் கண்டு, 'ஏன் இவ்வளவு கூட்டம்' என்று கேட்டுள்ளார். அதற்கு பொதுமக்கள், 'ரிஜிஸ்ட்ரார் இல்லை, அதுதான் இவ்வளவு கூட்டத்திற்கும் காரணம்' என்று சொல்லியுள்ளனர்.

உடனடியாக அமைச்சர் மூர்த்தி, ரிஜிஸ்ட்ரார் செந்தூர்பாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், ரிஜிஸ்ட்ரார் செந்தூரபாண்டியன் அந்த தொடர்பை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் அங்குள்ள வீடியோ ஃபுட்டேஜை எடுக்கச்சொல்லி, 'அவர் எந்த நேரத்திற்கு உள்ளே வந்தார். எப்போது வெளியில் சென்றார்' என்று கேள்வி எழுப்பினார்.

சில நேரம் கழித்து அவசர அவசரமாக உள்ளே வந்த ரிஜிஸ்ட்ராரை 'இப்படித்தான் வேலை பார்ப்பீர்களா. எப்போ வந்தீங்க..' என்றதும், '10 மணிக்கு' என்றார். 'எப்போ வெளியில் போனீங்க' என்றதுக்கு, '10.40 மணிக்கு' என்றார். 'என்ன வேலையாக போனீங்க..' 'ஐ.ஏ.எஸ் வரச்சொல்லியிருந்த காரணத்தினால் போனேன்', 'ஐ.ஏ.எஸ் இங்கே இருக்கிறார்.

நீங்க எந்த ஐ.ஏ.எஸ்ஸ பாக்கப் போனீங்க..' என்று அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்து அமைச்சர் கேட்டுக்கொண்டே இருந்தார். 'படித்த இளைஞர்கள் வேலையில்லாம பல பேர் இருக்காங்க, நீங்க என்னவென்றால் வேலையை வாங்கிக்கொண்டு ஆட்டம் போடுறீங்க என்று உங்களையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணா கூட திருந்த மாட்டீங்க' என்று பேசியுள்ளார். இதனால் ரிஜிட்டர் அலுவகத்தில் உள்ளே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் தவறான பத்திரப்பதிவு தொடர்பான புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை உள்ளது.

அதில், தினந்தோறும் 150 புகார்கள் வருகின்றன. அது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புகார் தெரிவிப்பதற்கான எண் அனைத்து அலுவலகத்திலும் டிஜிட்டல் அல்லது எழுத்துப்பூர்வமாக வைக்கப்படும். ஊரடங்கு காலத்திற்குப் பின்னால் பத்திரப்பதிவு எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருகிறது.

கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது பத்திரப்பதிவு அதிகமாக நடைபெற்று வருகிறது. தவறுகள் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் எனக் கூறினார்.

Updated On: 6 July 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்