ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரை சந்தித்தார் மு.க ஸ்டாலின்

ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரை சந்தித்தார்   மு.க ஸ்டாலின்
X
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் ஸ்டாலின் கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்

தமிழ்நாட்டில் புதியதாக ஆட்சி அமைய பெரும்பான்மை பலம் பெற்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதற்குரிய கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை 10.30 மணியளவில் வந்த மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அப்போது தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், வரும் 7ஆம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவைக்கான நிகழ்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என். நேரு, பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டமுக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக சட்டமன்ற குழுவின் தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதும், இன்று மாலைக்குள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை அளிப்பதாக தங்களிடம் ஆளுநர் தெரிவித்தார் என்று கூறினார்.

Tags

Next Story