பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில்  கைது
X

பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா.

புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை: புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஜூன் 16ஆம் தேதி டெல்லி அருகே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுவரை அவர் மீது மூன்று போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அவற்றுள் இரண்டு போக்சோ வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு போக்சோ வழக்கின் கீழ் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி கொடுத்த தகவலின் பேரில் மூன்றாவது வழக்கையும் போக்சோவாக மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் கைதான சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!