/* */

சேலம் 8 வழி சாலை பணி : அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி

சேலம் 8 வழி சாலை பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி அளித்தார்.

HIGHLIGHTS

சேலம் 8 வழி சாலை பணி : அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு  பேட்டி
X

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அருகில் அமைச்சர் சேகர் பாபு, எம்பி தயாநிதி மாறன்.

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்றுவரும் கால்வாய் பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் நெடுந்தூர கால்வாய் பணிகளை பார்வையிட்டு, சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விசாரித்து அதுகுறித்து கேட்டறிந்தனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு :

மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் 8 இடங்களில் கல்வெட்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல்வர் ஆணையின் அடிப்படையில் 4600 மீட்டர் நீர்வழி பாதையில், ரூபாய் 33 கோடி மதிப்பீட்டில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 6 மாதத்தில் இந்த பணிகள் நிறைவடையும் எனவும், அடுத்த வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் இந்த பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

சாலை மேல் சாலை போடுவதால் வீடுகளில் மழை காலங்களில் நீர் புகும் அபாயம் உள்ளது. எனவே மில்லிங் முறையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள 11.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளையும், 30.71 கிலோ மீட்டர் நீளம் உள்ள வடிகால் கால்வாய் களையும், 34 சிறு பாலங்களையும் சீரமைக்க 268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டு, இந்த ஆண்டிற்குள் பணிகளை முடிக்க முடிவு செய்துள்ளோம்.

சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவான திருப்புகழ் தலைமை, அளித்த அறிக்கையை பரிந்துரைக்கு ஏற்றுக் கொண்டுள்ளோம். அந்த பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து பணிகளும் நடைபெறும். நெடுஞ்சாலை பொறுத்த வரை சென்னையில் 258 கிலோ மீட்டர் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது, அதன் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பொறுத்தவரை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை அந்த துறை சார்ந்த அமைச்சர் கே என் நேரு தலைமையில் சிறப்பாக செய்து வருகிறார்.

சேலம் 8 வழி சாலை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது பணிகள் குறித்து மத்திய அரசுடன் எந்தவிதமான கடித போக்குவரத்தும் இல்லை. மத்திய அரசு கடிதம் அனுப்பும் வகையில் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 23 Jan 2022 5:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!