லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்:அமைச்சர் சுப்பிரமணியன்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருந்தகங்களில் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக கண்காணிக்கப்பதுவது உள்ளிட்ட லேப் டெக்னீசியன்கள் வைத்துள்ள 8 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற 60 நாட்கள் கால அவகாசத்தில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக்கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது, மருந்தகங்களில் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 60 நாட்கள் கால அவகாசத்தில் குழு அமைக்கப்பட்டு, எந்தெந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முடியும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனோடு, 25,436 தொற்றுகளோடு ஆட்சியை விட்டு சென்றனர் என்ற அமைச்சர், தமிழ்நாட்டில் 2 நாட்களாக 0 என்கிற நிலையில் இறப்பு எண்ணிக்கை உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.எந்த நோய் வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது என்றாலும், முன்னெச்சரிக்கை வழிகளை பின்பற்ற வேண்டும் என்றார். இன்னும் 2 மாதங்களுக்காவது முககவசம் அணிய வேண்டும்.தமிழகத்தில் மட்டும் பாதிப்பு குறைவாக இருக்கும் அண்டை மாநிலங்களில் தொற்றின் நிலை நீடித்து வருகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தால் மட்டுமே ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகும் என்றும், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதா வலுவாக உள்ளதால் தான் திருப்பி அனுப்பப்படுகிறது என்றும், அத்தகைய மசோதாவை யாரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. தேசிய நலவாழ்வு குழுமத்தில் உள்ள 663 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் .
திமுக ஆட்சியில் இருந்தபோது அண்ணாநகரில் அண்ணா அரங்கம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்து, அதில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி 90% அளவிற்கு பணியை முடிந்திருந்த நிலையில், அதன் பின் ஆட்சிக்கு வந்த அதிமுக பெயரை மட்டும் வைத்துக் கொண்டனர் என்றும், தன் பிள்ளைக்கு பெயர் வைத்தால் பரவாயில்லை பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளைக்கு பெயர் வைப்பது போன்று, திமுக ஆட்சியில் கட்டிய கட்டிடங்களுக்கு அதிமுக பெயரை வைத்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu