அரசு காப்பீடு திட்ட சிகிச்சை மருத்துவமனை குறித்து பெயர்பலகை: அமைச்சர்

அரசு காப்பீடு திட்ட சிகிச்சை மருத்துவமனை குறித்து பெயர்பலகை: அமைச்சர்
X
அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அரசு காபீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் பெயர் பலகை வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 104 ஆக்சிஜன் செறிவூட்டி படுக்கைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவனை இயக்குனர் நாராயண சாமி ஆகியோர் உடன் இருந்தானர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ஏற்கனவே 300 ஆக்சிஜன்களுடன் கூடிய படுக்கைகள், 350 சாதாரண படுக்கைகள் இ,ங்கு இருந்தது. தற்போது 104 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரானா தொற்றை தடுக்க தீவிர பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னையை பொறுத்தவரை சிசிசி மையங்களில் 6000 படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும் தற்போது பெரியார் திடலில் ஒரு மருத்துவமனை உருவாக்கி வருகிறது. சென்னையை பொறுத்தவரை 21 இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாக மருத்துவமனைக்கு செல்லாமல் பரிசோதனை மையங்கள் சென்று எந்த மருத்துவமனை செல்வது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் உள்ள 890 மருத்துவ மனைகளிலும் அரசு காபீட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு எங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது என பெயர் பலகை வைக்கப்பட இருக்கிறது. அதற்காக உத்தரவும் போடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதிகம் வசூலித்தால் ,அவை தெரிய வரும்போது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தடுப்பூசி போடும் எண்ணிக்கை குறையவில்லை. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்து விட்டது. குறிப்பாக வெளியில் செல்லும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த ஒரு வாரத்தில் 11 லட்சம் தடுப்பூசி போடப்படும் என அவர் தெரிவித்தார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!