கருணாநிதியின் படத்திறப்பு நாள், தமிழகம் பெருமை கொள்ளும் நாள், கனிமொழி எம்.பி
கனிமொழி எம்பி பைல் படம்
தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான முனையத்திற்கு வந்த திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"தன் வாழ்நாளில் தேர்தலில் தோல்வியையே பார்க்காத ஒரு தலைவர் கருணாநிதி. தான் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சட்டமன்ற வளாகத்தில் அவர் படம் திறக்கப்பட உள்ளது. தமிழகம் பெருமை கொள்ளும் ஒரு நாள் ஆகும்.
கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்கு செல்வதில் பொதுமக்களில் பலருக்கு தயக்கம் இருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. இது முன்னுதாரணமாக இருக்க கூடிய திட்டம்.
திமுக முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றிதான். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு .
இது முழுமையான வெற்றியல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்து உள்ளார். முழுமையாக கிடைக்கும் வரை திமுக போராட்டத்தை முன் எடுக்கும். ஒவ்வொரு நிலையிலும் மசோதாவிலும் இடஒதுக்கீடு உரிமையை பறிப்பதற்கான திட்டங்கள் திட்டப்படுகிறது. இதை ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்ப்ட்டவர்கள் தடுக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரை நடக்க விடவில்லை. எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ள பெகாசஸ் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு உள்ளது.
இதை மத்திய அரசு எடுக்க தயாராக இல்லாத போது வேறு எதையும் விவாதிக்க முடியாத நிலை மத்திய அரசு உருவாக்கி வைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu