வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனாம்பேட்டை காவல் நிலையம் எதிரிலுள்ள பீர்க்கரணை தெருவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிககளை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

பாஜக திமுக வாரிசு அரசியல் செய்கிறது என்ற கருத்துக்கு பாஜகவில் பெரிய பட்டியலே இருக்கிறது என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்

திமுக வாரிசுஅரசியல் செய்கிறது என பாஜக கூறிய கருத்துக்கு அதை அரசியலாக்க விரும்பவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனாம்பேட்டை காவல் நிலையம் எதிரிலுள்ள பீர்க்கரணை தெருவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிககளை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் பேசியதாவது:வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பள்ளிகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அகற்றி வருகிறோம். பாஜக தலைவர் திமுக வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்று கூறிய கருத்துக்கு பாஜகவில் பெரிய பட்டியலே இருக்கிறது எனவும்,அதை அரசியலாக்க விரும்பவில்லை யாராக இருந்தாலும் மக்கள் பணி செய்தால் நல்லது என தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture