வியாபாரிகளுடன் தகராறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம்: விக்கிரமராஜா கோரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா
இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, பள்ளிகள் கோயில்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள அகற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பாராட்டு தெரிவிப்பது. கொரோனா தடுப்பு ஊசி, சேவை கட்டணம் இல்லாமல் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, வணிகர் நல வாரியத்தை சீரமைத்து செயல்படுவது என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
பின்னர், நிருபர்களிடம் ஏ.எம். விக்கிரமராஜா கூறுகையில், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் வாரியத்தை கட்டமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத் தொடரின் நோக்கம் வியாபாரிகளுக்கிடையேயான இடர்பாடுகளை தடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
சென்னை மாநகரத்தை மூன்றாக பிரித்து, தாம்பரம், ஆவடி என புதிய மாநகராட்சிகளை முதல்வர் அறிவித்ததற்கு பேரமைப்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சியில் உள்ள கடைகளுக்கு சீரான வாடகை அமல்படுத்த வேண்டும். வியாபாரிகளின் அச்ச உணர்வை போக்கும் விதத்தில் தேவையில்லாமல் தகராறு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்,
வணிகத்துறையில் இடையூறாக செயல்படும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க மாற்று வழியை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும். இது குறித்து மாநகராட்சி ஆணையர், அதிகாரிகளுடன் பிளாஸ்டிக் மொத்த உற்பத்தியாளர்களுடன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது..
தடையை மீறி குட்கா வியாபாரம் செய்பவர்களை முக்கியமாக மொத்த வியாபாரம் செய்யும் ஈரோடு, திருப்பத்தூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களை நாங்கள் அடையாளம் காட்டி உள்ளோம். இப்படித் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மொத்தமாக விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். வெளிநாட்டு பானங்களை தவிர்த்து உள்நாட்டு பானங்களை உபயோகிக்க பேரமைப்பு அறிவுறுத்தி வருகிறது. மேலும், பனையில் இருந்து கிடைக்கும் பதநீரை பயன்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரமைப்பு சார்பில் வலியுறுத்தி உள்ளோம். மிகப் பெரிய மருத்துவம் பொருட்கள் கொண்ட பனை பொருட்களை பயன்படுத்துவதில்அரசு கவனம் செலுத்த வேண்டும்,
சாலையோர கடை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கி அவர்கள் வியாபாரத்திற்கு ஏதுவாக அரசு வழிவகை செய்யவேண்டும் என்றார் ஏ.எம். விக்கிரமராஜா. இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu