அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி காலமானார்
X

முன்னாள் அமைச்சர் விஜயசாரதி (பைல் படம்)

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் கடந்த 1980ஆம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால்,1984-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டபோது தோல்வியுற்றார்.

இதனையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 67 ஆகும்.

அரக்கோணத்தில் உள்ள சகோதரர் விஜயராகவன் வீட்டில் முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்