மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது, தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னை : அலைமோதிய மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருப்பதை கணக்கில் கொண்டும் சில ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததை அடுத்து வணிக வளாகங்களிலும் சுற்றுலா தலங்களிலும் அலைமோதிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்க்கும் போது மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது.
நேற்றைய தினம் திநகர் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகள் தேர்தல், திருவிழா போல் காட்சி அளித்தது என்றும் 100 பேர்கள் இருக்கக்கூடிய இடத்தில் 200 பேர்கள் இருந்ததால் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை.
எனவே முதல்வர் அவர்கள் இதில் உடனடி கவனம் செலுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனை அந்தந்த பகுதியில் உள்ள காவல் துறையினர் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu