சென்னை உள்நாட்டு விமான நிலைய பயணத்துக்கும் இ- பாஸ் பாஸ் முறை அமல்

சென்னை உள்நாட்டு விமான நிலைய பயணத்துக்கும் இ- பாஸ் பாஸ் முறை அமல்
X
சென்னை உள்நாட்டு விமான நிலையம்
சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விமானத்தில் செல்ல இ -பாஸ் முறை அமலுக்கு வந்தது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் அதிகரித்துவருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவா்களுக்கு இ-பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை உள்நாட்டு விமானநிலையங்களில் பயணிக்கும் பயணிகள் இ-பதிவு முறை இன்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் அத்தியாவவசிய பணிகளுக்காக பயணிக்கும் பயணிகள் அனைவரும் தங்களுடைய செல்போன்களில் eregister.tnega.org என்ற தளத்தில் ஆவணங்களுடன் பதிவுசெய்து,அதற்கான ஆதாரங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து மதுரை,கோவை,திருச்சி,தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று காலை முதல் இ-பதிவுடன் பயணம் மேற்கொள்கின்றனா்.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று மிகவும் குறைந்த அளவு விமானங்களே இயக்கப்படுகின்றன.சென்னையிலிருந்து புறப்படும் 33 விமானங்களில் 1,800 பயணிகளும்,சென்னைக்கு வரும் 35 விமானங்களில் 1,200 பேரும், மொத்தம் 68 விமானங்களில் 3 ஆயிரம் போ் மட்டுமே பயணிக்கின்றனா்.அதிலும் ஹைதராபாத் விமானத்தில் 4,தூத்துக்குடி விமானத்தில் 6, கோவை விமானத்தில் 9 போ் மட்டுமே பயணிக்கின்றனா்.

அதோடு சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இரவு நேர விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு முதல் விமானம் காலை 8 மணிக்கு தான் வருகிறது.அதைப்போல் இரவு 9.15 மணிக்கு கடைசி விமானம் புறப்பட்டு செல்கிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!