மின் கணக்கீடு ஸ்மார்ட் மீட்டர் விரைவில் அறிமுகம். அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

மின் கணக்கீடு ஸ்மார்ட் மீட்டர் விரைவில் அறிமுகம். அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
X

தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் (பைல் படம்)

தமிழகத்தில் மின் கணக்கீடு செய்ய ஸ்மார்ட் மீட்டர் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை, திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பை சரிசெய்வதற்கான ஸ்மார்ட் மீட்டர் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக மின் பராமரிப்பு பணிகள் இல்லாமல் இருந்த நிலையில் பத்தே நாட்களில் திமுக அரசு பராமரிப்பு செய்து சாதனை செய்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future