ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட திராவிட விடுதலைக் கழகத்தினர்
ஆளுநர் மாளிகை முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் முற்றுகை போராட்டம்
தமிழக அரசு இயற்றிய நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சைதாப்பேட்டையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் தமிழகத்திற்கு வேண்டாம், சமூகநீதி மண்ணில் மனுநீதியை நிலை நாட்டாதே, ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் என முழக்கங்களை எழுப்பினர்...
இதன் பின்னர் பேசிய திவிக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், ஆளுநர் சொன்ன காரணம் இந்த நீட் தேர்வை ரத்து செய்தால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்படையலாம். என்று கூறுகிறார் ஏகே ராஜன் தலைமையில் கொடுத்த பரிந்துரை படித்தாரா ஆளுநர் ?
ஆளுநர் செய்ய வேண்டிய கடமை குடியரசு தலைவருக்கு கொடுப்பதே. தமிழ்நாடு சட்டமன்ற அதிகாரத்தை விட ஆளுநர் மாளிகை அதிகாரம் பெரியது என்று காட்டுகிறது.பாஜக தமிழ்நாட்டில் வரமுடியாது என்று கூறிய அடுத்த நாளே இப்படி ஆளுநர் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என பேசினார்.
இதைத் தொடர்ந்து , போராட்டத்தில் பங்கேற்ற சிலர் ஆளுநரின் புகைப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu