ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு: அமைச்சா் சுப்பிரமணியன் விளக்கம்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு:   அமைச்சா் சுப்பிரமணியன் விளக்கம்
X

பைல் படம்

செங்கல்பட்டு, வேலூா், சென்னை அரசு மருத்துவமனைகளில் 19 பேர் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமில்லை என்று அமைச்சா் சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்

அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை என்று நான் சொன்னது உண்மை தான். ஆனால், நான் சொன்னது திமுக அரசு பொறுப்பேற்றப்பின் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை என்றுதான்.

தமிழக முதல்வா் ஸ்டாலின் கடந்த மே 7 தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 பேர் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவித்தார். அந்த சம்பவம் மே 4 தேதி இரவு நடந்தது.அப்போது, அதிமுகவின் ஆட்சிதான் இருந்தது.

அதே அதிமுக ஆட்சியில் தான் கடந்த ஏப்ரல் 6 தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 பேரும், 19 தேதி வேலூா் அரசு மருத்துவமனையில் 4 பேரும் இறந்தனர். இந்த இறப்புகள் எல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடைபெறவில்லை. ஆக்சிஜன் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளால் இறப்பு ஏற்பட்டது.

இந்த மூன்று சம்பவமும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. திமுக ஆட்சியில் நடைபெறவில்லை என்று இவ்வாறு குறிப்பிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!