குடிமகன்களுக்கு அதிர்ச்சி தகவல்: டாஸ்மாக் நேரம் குறைப்பு ?

குடிமகன்களுக்கு அதிர்ச்சி தகவல்:   டாஸ்மாக் நேரம் குறைப்பு ?
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மது கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தினசரி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முன்னதாக டாஸ்மாக் கடைகளும், பார்களும் மூடப்பட்டன. கடந்த நவம்பவர் முதல் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்பட துவங்கியது. தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்ட நிலையில் குடிமகன் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture