மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்   9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை
X
மீண்டும் கொரோனா பரவி வருவதால் தமிழக அரசு 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு திங்கட்கிழமை முதல் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் திங்கட்கிழமை (நாளை மறுநாள்) முதல் மறு அறிவிப்பு வரும் வரை 9, 10 , 11 வகுப்புகளுக்கு விடுமுறை ஆனால், விடுமுறை அறிவிக்கப்படும் இந்த வகுப்புகளுக்கு ஆன் லைன் வகுப்புகள் தொடரும். பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, பள்ளிகள் தொடர்ந்து நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாலும், அதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாகவும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடக்கும். அந்த பள்ளி மாணவர்களுக்காக விடுதிகளும் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு தமிழக அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future