கொரானா தடுப்பூசிக்கு கால இடைவெளி நீட்டிப்பு

கொரானா தடுப்பூசிக்கு கால  இடைவெளி நீட்டிப்பு
X
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி நீடிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவுவதை தடுக்க கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த 2 தடுப்பூசிகளிலும் 2 டோஸ் போட வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் முதல் டோஸ் போடப்பட்ட 4 முதல் 6 வாரங்களுக்குள் போட அறிவுறுத்தப்பட்டது. அதனை இப்போது 8 வாரங்களுக்குள் போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் கோவேக்சின் போட்டு கொண்டவர்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!