நடிகை சாந்தினியின் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்

நடிகை சாந்தினியின் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு  ஜாமீன்
X

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதி மன்றம். ( பைல் படம்)

நடிகை சாந்தினி பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு, நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை சாந்தினி மீதான பாலியல் குற்றசாட்டில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் சிறையில் இருந்து வரும் நிலையில் அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் சற்று முன் இந்த மனுவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும்..

அவரது பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!