சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட குண்டுகள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு பயணிகள் விமானம் புறப்படத் தயாராகி இருந்தது.அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது டெல்லியை சேர்ந்த சுனில் சொலாங்கி (வயது -39) என்ற தொழிலதிபரின் கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது குண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த கைப்பையை தனியே எடுத்து வைத்து விட்டு தொழிலதிபரிடம் விசாரித்தனர்.அப்போது சுனில் சொலாங்கி அந்த கைப்பையில் எதுவும் இல்லை என்று கூறினார்.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பை திறந்து பார்த்தனர். அதில் துப்பாக்கி குண்டுகள் 2 இருந்தது தெரியவந்தது.
கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் 7.55 எம்.எம். ரக குண்டுகள் ஆகும். இதையடுத்து துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொழிலதிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
டெல்லியில் இருந்து 4ம் தேதி திருப்பதிக்கு சென்றதாகவும், இங்கே இருந்து தற்போது ஜெய்ப்பூர் செல்வதற்காக வந்திருப்பதாகவும் தன்னிடம் துப்பாக்கி லைசென்ஸ் மற்றும் ஆவணங்களும் வைத்திருப்பதாகவும் பாதுகாவலர் கைப்பையை அவசரமாக எடுத்து வந்ததால் தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் வந்துவிட்டது என்று கூறினார். அவரையும் துப்பாக்கி குண்டுகளையும் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி தொழிலதிபர் ஒருவரிடம் 15 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் டெல்லி தொழில் அதிபரிடம் இருந்து 2 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள.இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu