சென்னைக்கு 2.4 லட்சம்டோஸ் கோவிசீல்டு தடுப்பூசி மும்பையிலிருந்து வந்தன
சென்னை விமான நிலையத்தில் இருந்து இறக்கப்படும் கோவிஷீல்டு மருந்து.
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தளா்வுகளற்ற முழு ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஆக்ஜிசன்,வெண்டிலேட்டா்மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிலுருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் தமிழகத்திற்கு பெருமளவு வரவழைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்து இறங்கின. 20 பாா்சல்களில் வந்த தடுப்பூசி மருந்து பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கியதும், விமானநிலைய அதிகாரிகள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனா்.
அதன்பின்பு அந்த தடுப்பூசி பாா்சல்கள் அனைத்தும் 2 குளிா்சாதன வாகனங்களில் ஏற்றப்பட்டன.அதில் 2 லட்சத்து 4 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தின் மருந்துகள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.36 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu