பிஇ கவுன்சலிங் 2-ஆம் சுற்று முடிந்தது : 72 கல்லூரிகளில் ஒருமாணவர்கூட சேரவில்லை
பிஇ, பிடெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் இதுவரை 2 சுற்றுகள் நிலையில் 72 கல்லூரிகளில் ஒரு மாண வர் கூட சேரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மொத் தம் உள்ள 500க்கும் மேற் பட்ட கல்லூரிகளில்ளிட்டம் முன்னணி 72 பொறிவியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 131 கல்லூரிகளில் 1சதவீதம் கூட மாண வர்கள் சேரவில்லை. 5 சதவீதத்துக்கும் குறை வாக 248 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.306 கல்லூரிகளில் 10சதத்துக்கும் குறைவாகவும்,342கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவும், ௯௮ கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் கூடுதலாகவும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கிண்டி, எம்ஐடி. உள்ளிட்ட 15 முன்னணி பொறியியல் கல்லூரிகளில்98 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 33 கல்லூரிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக சேர்ந்துள்ளனர். 61 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிமாக சேர்ந்துள்ளனர். இது தவிர பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் சேரவில்லை என்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் 3 மற்றும் 4 -ஆம் கட்ட கவுன்சலிங் இன்று நடைபெறுகிறது.. இதற்கு பிறகு மேற்கண்ட கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வது குறித்து தெரியவரும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேராமல் புறக்கணித்த கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் 22. கல்லூரிகள் மூடப்பட்டன. நடப்பாண்டில் 22 கல்லூரிகள் மூடப்படப்போவதாக சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இதன் காரணமாக நிகழாண்டில் பிஇ, பி.டெக் படிப்புக்கான இடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கும் என கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu