அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பைல் படம்
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு உள்பட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது குறித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
ஆளுங்கட்சி என்ற மமதையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிமுகவை அழிக்கலாம் என்று கடந்த காலங்களில் அடக்குமுறைகளை செய்தனர். அந்த எண்ணம் ஈடேறவில்லை. இது ஜனநாயக நாடு. நீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் கருத்துகளை எடுத்து வைப்போம். நிச்சயமாக நாங்கள் நிரபராதி என்ற ஒரு நிலை ஏற்படும். எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என்று நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.
தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுகவை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற சோதனை மூலம் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது.
நீதிமன்றங்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் போலீசை ஏவி விட்டு, அதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகதான் இதை பார்க்க முடியும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu