அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காலமானார்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காலமானார்
X

அனந்த கிருஷ்ணன்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் அனந்த கிருஷ்ணன் (வயது (92). இவர் நுரையீரல் தொற்றால் கடந்த ஒருவாராமாக பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை தனியார் மருத்துவமனைரியல் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்த அனந்தகிருஷ்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டட பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்கா மின்னகோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றார்.

பின்னர் புதுடெல்லி மத்திய சாலை ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை அறிவியல் அலுவலராகவும், கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

கணினியிலும், இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதில்முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றவர்களில் ஒருவர் ஆவார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கி ஒற்றைச் சாளர முறை நடைமுறைக்கும் இவரே முக்கிய காரணமாக இருந்தார். மாணவர்களுக்கு செமஸ்டர் கல்வி முறையை கொண்டு வந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!