இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி

இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர்  நிலை தடுமாறி கீழே விழுந்து பலி
X

சாலை விபத்து நடந்த இடம்

இருசக்கர வாகனத்தில சென்ற ஆயுதப்படை போலீஸ் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் வனத்துறை அலுவலகம் எதிரில் இருசக்கர வாகனத்தில் சீருடையில் பணிக்கு சென்று கொண்டிருந்த கண்ணன்(29), என்ற ஆயுதப்படை காவலர் தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்த போது, இருசக்கர வாகனம் சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் உரசியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்து தலை மற்றும் காதில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியாகி நிகழ்விடத்திலேயே மயங்கினார்.
தகவலறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
2017ம் ஆண்டில் காவல் துறையில் பணியில் சேர்ந்த கண்ணன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர், இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!