பதவி இழந்து அரசியலில் பலவீனமாக உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி:டி.டி.வி.தினகரன் சாடல்

பதவி இழந்து அரசியலில் பலவீனமாக உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி:டி.டி.வி.தினகரன் சாடல்
X

டி.டி.வி.தினகரன்

ஆட்சியில் இல்லாமல் அதிகாரமற்று பலவீனமாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் கூறினார்.

சென்னையில் அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியது :

மண்டலவாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றுவருகிறது.வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சந்திப்பு நடைபெற்று வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் தோல்விக்கான காரணம் எனக்கே தெரியும் என்று கூறினார்.தேர்தலில் வெற்றி தோல்வி தாண்டி அம்மாவின் ஆட்சியை மீட்டெடுக்க தான் அமமுக தொடங்க பட்டது. அமமுக மூலம் ஜனநாயக முறைப்படி வெற்றிபெற்று கட்சியை மீட்டு எடுக்க முடியும்.தோல்வியால் நாங்கள் சோர்வடையவில்லை. உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றது வழக்கமான நிகழ்வு தான்.

சின்னமாவின் ஆதரவு அமமுகவிற்கு இருக்கிறதா? இல்லையா? என்று எல்லோருக்கும் தெரியும். சசிகலா எனது சின்னம்மா அந்த உறவு எப்போதும் இருக்கும். சசிகலா அவர்களின் பாதையும் எனது பாதையும் வெவ்வேறாக உள்ளது. ஆனால், இலக்கு ஒன்று தான். சசிகலா அவர்கள் சட்டப்படி கட்சியை மீட்க முயற்சி செய்துவருகிறார். ஆளுங்கட்சியை செயல்பட விட்டு 6 மாதங்களுக்கு பிறகு குறை இருப்பின் சுட்டிக்காட்டலாம். சசிகலாவின் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் பேசியது பற்றி செய்தியாளர் கேட்டபோது. பன்னீர்செல்வம் நிதானமாக முடிவு எடுப்பவர்.அவரது கருத்து சரியாகத்தான் இருக்கும். தொண்டர்களின் எண்ணத்தையே பேசியிருக்கிறார்.

கொடநாடு கொலை வழக்கில்,மடியில் கனம் இல்லாட்டி பழனிசாமி பயம் இல்லாமால் இருக்கலாம். அரசியல் ரீதியாக பழனிசாமி பலவீனமாக உள்ளார். துரோகம், நம்பிக்கை துரோகம் மூலம் ஆட்சி நடத்தியவர்கள் இன்று பதவி இல்லாமல் பலவீனமாக உள்ளார்கள். அம்மாவின் மறைவுக்கு திமுக தான் புரளியை கிளப்பியது. அரசியலுக்காக விசாரணை ஆணையம் அமைத்து மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது. 1983 ல் இருந்து அம்மாவை எனக்கு தெரியும். அவருக்கு எந்த குழந்தையும் கிடையாது. விளம்பரத்திற்காக இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மாவின் உண்மை தொண்டர்கள் அமமுகவில்தான் உள்ளனர். சுயநலத்திற்காகவே இன்னும் அதிமுகவில் சிலர் உள்ளனர். தேவை ஏற்பட்டால் சின்னம்மாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் எனவும் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!