ஐதராபாத்திலிருந்து 82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னை வந்தது!

ஐதராபாத்திலிருந்து  82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னை வந்தது!
X
ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் மேலும் 82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னைக்கு வந்திறங்கியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமளவு குறைந்து வருகிறது. ஆனாலும் தமிழக அரசு மாநிலம் முழுவதிலும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடுவதில் மாநில அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதோடு அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள்,தனியாா் தொழிற்சாலைகள் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன. அதற்கு தடுப்பூசிகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான அளவு தடுப்பூசிகளை ஒதுக்கவில்லை. எனவே மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 16 பாா்சல்களில் 426 கிலோ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அதில் 82 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் வந்தன.தடுப்பூசி பாா்சல்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசிகள் சென்னையில் உள்ள 2 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ துறைக்கும் வந்துள்ளதாக கூறப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா். அங்கிருந்து தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil