தமிழ்நாட்டிற்கு 5.32 லட்சம் தடுப்பூசி, விமானம் மூலம் வந்தது

தமிழ்நாட்டிற்கு 5.32 லட்சம் தடுப்பூசி, விமானம் மூலம் வந்தது
X
சென்னைக்கு விமானம் மூலம் வந்த தடுப்பூசிகள்.
தமிழ்நாட்டிற்கு 5.32 லட்சம் தடுப்பூசி, விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தது.

தமிழ்நாட்டிற்கு மேலும் 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 1,32,250 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் மொத்தம் 5,32,250 டோஸ் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலிருந்து விமானங்களில் சென்னை வந்தன.

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.எனவே ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க கோரியுள்ளது.

இதையடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு இன்று 5,32,250 டோஸ் கோவிஷீல்டு,கோவாக்சீன் தடுப்பூசிகளை ஒன்றிய மருந்து சேமிப்பு கிடங்குகளிலிருந்து விடுவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 34 பாா்சல்களில் இன்று பகல் 12 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்து சோ்ந்தன.

அதைப்போல் ஹைதராபாத்திலிருந்து 1,32,250 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் 27 பாா்சல்களில் சென்னை வந்து சோ்ந்தன.

சென்னை விமானநிலைய அதிகாரிகள் அவைகளை,தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!