ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!

ஐதராபாத்திலிருந்து 5000 கோவாக்சின் மருந்துகள் சென்னை வந்தடைந்தன!
X
ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து சென்னைக்கு வந்திறங்கின.

தமிழகத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பு மருந்துகள் சுமார் 290 கிலோ எடையுள்ள 10 பெட்டிகள் அடங்கிய 50,000 டோஸ்கள் இன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியது.

பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்துகளை பெற்றுக்கொண்டு குளிர்சாதன வசதியுடைய வாகனங்களில் ஏற்றி சென்னை டிஎம்எஸ் வளாக தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture