ஜூலை 5-ல் நீட் தேர்வு குறித்து 4 ஆம் கட்ட ஆலோசனை கூட்டம்

ஜூலை 5-ல் நீட் தேர்வு குறித்து 4 ஆம் கட்ட ஆலோசனை கூட்டம்
X

பைல் படம்

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து 4ம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 5 ம் தேதி நடைபெற உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.

சென்னை : நீட் தேர்வின் பாதிப்பு குறித்து 4ம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 5 ம் தேதி நடைபெற உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 89,342 பேர் நீட் தேர்விற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கருத்துகளை இறுதி செய்வது குறித்து நேற்று மாலை 3ம் கட்ட ஆலோசனைக்கு பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; "நீட் தேர்வு தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் நிறைய கருத்துகள் வந்துள்ளன. அனைத்து கருத்துகளையும் ஆராய்ந்தப் பிறகே அறிக்கை தயார் செய்யப்படும்.

நான்காம் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 5 ம் தேதி நடைபெற உள்ளது. ஒரு மாதத்துக்குள் ஆய்வை முடிக்க முயற்சிக்கிறோம். ஆய்வு முடியாவிட்டால் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்