ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு 24 ஆயிரம் கோவாக்சீன் டோஸ் வருகிறது

ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு  24 ஆயிரம்  கோவாக்சீன் டோஸ் வருகிறது
X

சென்னை விமான நிலையம்

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு 24 ஆயிரம் கோவாக்சீன் டோஸ் சென்னைக்கு வருகிறது.

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கோவாக்சீன், கோவிசீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஆங்காங்கே இருந்து சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று காலை இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கோவாக்சீன் தடுப்பூசிகள் 24 ஆயிரம் டோஸ் வருகிறது.2 பாா்சல்களில் 59 கிலோ மருந்துகள் உள்ளன. அரசு சார்பில் இவை பெறப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!