முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு முறைகேடாக 1.5 டன் ஆவின் ஸ்வீட்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு முறைகேடாக 1.5 டன் ஆவின் ஸ்வீட்
X

அமைச்சர் நாசர் (பைல் படம்)

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு முறைகேடாக 1.5 டன் ஆவின் ஸ்வீட் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

சேலம் ஆவின் பால் விற்பனை மையங்களில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்ட பால் வளத்துறை அமைச்சர் நாசர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,

சத்துணவு மையங்களில் பால் உணவை சேர்ப்பது குறித்து முதல்வர் முடிவெடிப்பார் என தெரிவித்த அமைச்சர், பால் விற்பனை நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு செய்வதன் மூலம் குறைகள் மற்றும் வளர்ச்சிக்கான தேவைகள் தெரிய வருகிறது. பால் விற்பனையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற அமைச்சர், சேலம், தேனி, மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பண்ணையில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் 234 பணி நியமனங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளன. ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. விசாரணையின் முடிவில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
ai healthcare products