வண்டலூர் சிங்கங்களை தவிர எந்த உயிரினங்களுக்கும் கொரோனா இல்லை -வனத்துறை அமைச்சர்

சென்னை கிண்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்த காட்சி.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனோ ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள 30 வகையான உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கிண்டி சிறுவர் பூங்கா சென்னை மக்களின் இதயமாக கருதப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் காடாக உள்ளது. இங்கு 400 வகையான உயிரினங்கள் மக்கள் பார்வைக்கு உள்ளன. சராசரியாக 9 லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
தொடர்ந்து இதனை பராமரித்து, 5 ஆண்டு காலத்தில் எவ்வளவு தரம் உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்துவோம். அனைத்து உயிரியல் பூங்காவிலும் உள்ள வன விலங்குகளுக்கு கொரானா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களை தவிர வேறு உயிரினங்களுக்கு கொரானா தொற்று இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள வனங்களை 33 சதவீதமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் யாரேனும் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட ஆண்டுகள் இருந்திருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதியில் வன விலங்குகள் வருவதை தடுக்க காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வெளிநாடுகளிலிருந்து கூடுதலாக ஒரு வரிக் குதிரை, ஒரு ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் 6 மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu