துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.63 லட்சம் தங்க கட்டிகள் சென்னையில் பறிமுதல்!

துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.63 லட்சம் தங்க கட்டிகள் சென்னையில் பறிமுதல்!
X
துபாயில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான, துபாய் நகரிலிருந்து, 'பிளை துபாய்' விமானம், வந்தது. விமானத்தில் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த சாமினோ ஜெசையா (வயது 26) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சோதனையில் அவர் அணிந்திருந்த ஆடையில் மறைத்து வைத்திருந்த 63.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.25 கிலோ தங்க கூழ் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சாமினோ ஜெசையாவிடம், சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!