வண்ணாரைப்பேட்டை: கொரோனாவுக்கு குழந்தைகள் நல மருத்துவர் உயிரிழப்பு

வண்ணாரைப்பேட்டை: கொரோனாவுக்கு குழந்தைகள் நல மருத்துவர் உயிரிழப்பு
X

கொரோனாவுக்கு பலியான குழந்தைகள் நல மருத்துவர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் கொரோனா தொற்றுக்கு குழந்தைகள் நல மருத்துவர் பலியானார்.

சென்னை வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாதி (வயது 84 ). குழந்தைநல மருத்துவர். இவர், கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

60 ஆண்டு காலத்திற்கு முன்பு வடசென்னை பகுதியில் வண்ணாரப்பேட்டையில் சிறிய கிளினிக் ஒன்று தொடங்கி சிகிச்சையை ஆரம்பித்து ஆரம்ப காலத்தில் இரண்டு ரூபாயில் வைத்தியம் பார்த்து வந்தவர், காசில்லாமல் வரும் ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்தவரை இலவச மருத்துவம் பார்த்தவர். நோயாளிகளிடம் கோபம் கொள்ள மாட்டார்.

50 - 60 வருடம் முன்பே பின்தங்கிய வடசென்னை பகுதியில் இருந்து லண்டன் சென்று எப்.ஆர்.சி.எஸ். மருத்துவம் படித்து வந்தவர். கடந்த வாரம் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரிடம் சிகிச்சை பெற்று தற்போது பெரிய நிலையில் சமூகத்தில் உள்ளனர் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்றும் நோய் தொற்றால் நல்லவர்கள் நாட்டில் இருக்க முடியவில்லை என்ற நிலைக்கு இவருடைய மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future